லாஜிக்லேயே கைய வச்சா? எவ்வளவு சொல்லியும் கேட்காத விஷால்.. கடைசில அந்த படம் ப்ளாப்

vishal 1
Vishal: பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் விஷால் குறித்து ஒரு பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்து இருந்திருந்தார். 2014 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் சிகப்பு மனிதன். அந்தப் படம் வெளியாகி ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. சுமாரான வரவேற்பையை பெற்றது. இந்த படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை தனஞ்செயன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
படத்தில் அவ்வப்பொழுது விஷால் தூங்கி விழுவது மாதிரியான ஒரு கேரக்டரில் நடித்திருப்பார் .அது கடைசியில் லட்சுமி மேனனை ஒரு ஐந்து பேர் கொண்ட கும்பல் ரேப் பண்ணுவது மாதிரியான காட்சி இடம் பெற்று இருக்கும் .அந்த நேரத்திலும் விஷால் மயங்கி அப்படியே விழுந்து விடுவார், இதைப் பற்றி தனஞ்செயன் விஷாலிடம் கூறும் பொழுது படம் முழுக்க விஷாலும் லட்சுமிமேனனும் உருகி உருகி காதலித்திருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது இந்த மாதிரி ஒரு காட்சி இடம் பெற்றால் ரசிகர்கள் உருகி உருகி காதலித்த ஒரு பெண்ணை ஐந்து பேர் ரேப் செய்கிறார்கள்.
அந்த சமயத்திலும் விஷால் இப்படி உறங்குகிறாரே என்று தான் நினைக்க தோணும் .அது ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தும். வேண்டுமென்றால் ரேப் என்ற ஒரு விஷயத்திற்கு பதிலாக அந்த ஐந்து பேர் லட்சுமி மேனனை கொலை வெறியில் தாக்கி கொன்று விடுவது மாதிரி மாற்றி விடலாம் என தனஞ்செயன் கூறினாராம். இதை அந்த படத்தின் இயக்குனர் திருவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் விஷால் அதற்கு சம்மதிக்கவே இல்லையாம்.

இருந்தாலும் தனஞ்செயன் இதற்கு விருப்பமே இல்லாமல் தான் இருந்திருக்கிறார். உடனே விஷால் வேண்டுமென்றால் இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை நான் வாங்கிக் கொள்கிறேன் என அவரிடம் 9 கோடியை கொடுத்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்கினாராம் விஷால். அதன் பிறகு படத்தை ரிலீஸ் செய்ய படம் ப்ளாப். ஆனால் தனஞ்செயனுக்கு நான்கு கோடி லாபம் கிடைத்திருக்கிறது.
ஏனெனில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே படத்திற்கான சில உரிமைகளை நல்ல விலையில் விற்று இருக்கிறார். ஆனால் விஷாலுக்கு நான்கு கோடி நஷ்டம்.படம் வெளியாகி ஐந்து கோடி தான் வசூல் அடைந்து இருக்கிறது. அவர் 9 கோடிக்கு வாங்கியதால் மீதி நான்கு கோடி அவருக்கு நஷ்டம் என தனஞ்செயன் கூறினார். ஆனால் இதே படத்தை தெலுங்கில் நான் சொன்ன மாதிரி அந்த மாற்றங்களை எல்லாம் செய்து ரிலீஸ் செய்தேன். டப்பிங் விஷால் பேச முடியாது என சொல்லிவிட்டார் .அதனால் வேறு ஒரு நபரை வைத்து டப்பிங் முடித்து தெலுங்கில் ரிலீஸ் செய்தேன். படம் சூப்பர் டூப்பர் ஹிட். உடனே விஷால் என்னிடம் வந்து உங்களுடைய ஜட்ஜ்மெண்ட் சரியாகத்தான் இருக்கிறது என கூறியதாக தனஞ்செயன் தெரிவித்தார்.