அது வேற வாய்.. இது நாற வாய்! விஜய் பற்றி அன்றும் இன்றும் சொல்லி சிக்கிக் கொண்ட வைகைப்புயல்

vadivelu 1
Vadivelu: மீண்டும் காமெடியில் எப்படியாவது விட்ட இடத்தை அடைய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் வடிவேலு. அந்த வகையில் சமீபத்தில்தான் கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதுவரை சுந்தர் சி படம் என்றாலே ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப சமீபகாலமாக வெளியான சுந்தர் சி யின் படங்கள் ப்ளாக் பஸ்டர் படங்களாக மாறியது.
அப்படித்தான் கேங்கர்ஸ் திரைப்படத்தையும் எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவு படம் இல்லை என்றுதான் அனைவரின் கருத்தாக இருந்தது. நல்ல பீக்கில் இருக்கும் போது தேவையில்லாமல் வாயைக் கொடுத்து சினிமாவில் இருந்து சில காலம் விலக்கி வைக்கப்பட்டார் வடிவேலு. அவ்வளவுதான் அதிலிருந்தே அவருடைய கெட்ட நேரம் ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.
தொடர்ந்து கொரனா என கிட்டத்தட்ட 4 வருடங்கள் சினிமாவில் தலைகாட்ட முடியாத சூழ்நிலை. மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து மாமன்னன் திரைப்படத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து பேரு வாங்கினார். இப்போது மீண்டும் காமெடியை தனதாக்கிக் கொள்ள முயற்சி செய்து வருகிறார். எப்படி விஜயகாந்துக்கு எதிராக பேசி பேசி தன்னுடைய பேரை கெடுத்துக் கொண்டாரோ அதே போல் விஜய்க்கு எதிராகவும் ஒரு மேடையில் பேசினார்.
ஏற்கனவே விஜயுடன் ஒரு சில படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் வடிவேலு. அந்த வகையில் சுறா படத்தின் விழாவின் போது விஜயை பற்றி பேசிய வடிவேலு ‘விஜய்க்கு பெரிய சிறப்பு என்னவெனில் தாய் தகப்பனின் ஆசிர்வாதம். அன்னையிம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம். இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம். பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம் ’ என எம்ஜிஆரின் பாடலை மேற்கோள் இட்டு விஜய் ஊரை சீக்கிரம் வாங்கிடுவாரு என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் ‘கருணை இருந்தால் வள்ளலாகலாம்.கடமை இருந்தால் வீரனாகலாம். பொறுமை இருந்தால் மனிதனாகலாம். இந்த மூன்று இருந்தால் தலைவனாகலாம்’ என கூறி இதுக்கு மேல நான் என்ன சொல்றது என கூறியிருப்பார். அப்படி பெருமையாக பேசிய அதே வடிவேலு விஜய் இப்போது அரசியலுக்குள் வந்த பிறகு திமுகவிற்கு ஆதரவாக ஒரு மேடையில் பேசியிருப்பார்.
அதில் அவர் பேசும் போது ‘வா வா வா ராசா.. நீ என்ன வேணுனாலும் பேசு.என்ன வேணுனாலும் சொல்லு. வா ராஜா..எத்தனையோ பள்ளம் வரும். மேடு வரும். எல்லாத்தையும் நாங்க அடிச்சு ஜெயிச்சு போயிட்டே இருப்போம். வரும் 2026 லயும் இதேதான். ஆமா போயிட்டே இருப்போம். இவர்தான் ஜெயிப்பாருங்க. சொன்னதையும் செய்றாரு. சொல்லாததையும் செய்றாரு’ என ஸ்டாலின் குறித்து பேசியிருப்பார். உடனே நெட்டிசன்கள் அன்றும் இன்றும் என இந்த இரு வீடியோவையும் பகிர்ந்து வடிவேலுவை பங்கம் செய்து வருகின்றனர்.