அல்லு அர்ஜுன் மாதிரி வந்திருக்க வேண்டியவருங்க சிம்பு!.. வானம் தயாரிப்பாளர் இப்படி சொல்லிட்டாரே!..

by Saranya M |   ( Updated:2025-05-04 10:39:49  )
சிம்பு
X

#image_title

அல்லு அர்ஜுன் நடித்த வேதம் படத்தை தமிழில் வானம் என ரீமேக் செய்து சிம்பு கடந்த 2011ம் ஆண்டு நடித்தார். அந்த படத்தில் சிம்புவுடன் சந்தானம், அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அல்லு அர்ஜுன் அப்போதைக்கு சிம்பு ரேஞ்ச்சில் தான் இருந்தார். ஆனால், அடுத்த 10 வருடங்களில் அலா வைகுந்தபுரமுலோ, புஷ்பா 1 மற்றும் 2 என அவருடைய ரேஞ்ச் பான் இந்தியா அளவுக்கு சென்றுவிட்டது.

சிம்பு வானம் படத்திற்கு பிறகு பெரியளவில் வந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு சில காரணங்களால் அவரால் பெரிதாக ஷைன் ஆக முடியவில்லை என வானம் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

வானம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தான் கணேஷ் ரவிச்சந்திரன், சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவாருன்னு யாரு சொன்னா? அவரை கேமராவில் அழகாக இயக்குநர்கள் காட்ட ஆரம்பித்துவிட்டால், ஒரு நல்ல சீனில் தான் நடிக்கப் போகிறேன் என அவருக்குத் தெரிந்துவிட்டால் அன்றைக்கு மற்றவர்களுக்கு முன்பாக செட்டில் முதல் ஆளாக சிம்பு இருப்பார்.

#image_title

சில தவறான படங்களையும் இயக்குநர்களையும் அவர் தேர்வு செய்தது தான் அவர் செய்த பெரிய தவறு என கணேஷ் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். இல்லையென்றால் இந்நேரத்துக்கு அவர் அல்லு அர்ஜுன் போல மாறியிருப்பார். இப்போது ஒன்றும் கெட்டுப் போகவில்லை, சீக்கிரமே அவர் எடுத்து வைக்கும் அடுத்த அடுத்த அடிகளால் அந்த இடத்துக்கு கட்டாயம் வரத்தான் போகிறார். அதற்கான முழு சக்தியும் திறமையும் அவரிடம் நிறையவே உள்ளன என்றார்.

சிம்புவின் 49வது படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் அந்த படத்தை இயக்கவுள்ளார். வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சிம்பு - சந்தானம் மீண்டும் இணைந்துள்ளனர். டிராகன் ஹீரோயின் கயாடு லோஹர் நடிக்க, சாய் அபயங்கர் அந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Next Story