Siragadikka aasai: சீதாவால் மீண்டும் கண்ணீர் விடும் மீனா… முத்துவின் முடிவு என்னவாக இருக்கும்?

by AKHILAN |
Siragadikka aasai: சீதாவால் மீண்டும் கண்ணீர் விடும் மீனா… முத்துவின் முடிவு என்னவாக இருக்கும்?
X

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி ஹிட் தொடரான சிறகடிக்க ஆசையில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

முத்து கவலையுடன் வீட்டுக்கு வந்து சாப்பிட எதுவும் இருக்கா என பார்க்கிறார். தோசை இருப்பதை பார்த்து குழம்பை டேஸ்ட் செய்து பார்க்க மீனா வச்சது எனத் தெரிந்து கொண்டு அவரை ஓடி ஓடி தேடுகிறார். மீனாவும், ஸ்ருதியும் ரூமுக்குள் சிரித்துக்கொண்டு இருக்கின்றனர்.

பின்னர் மீனா செல்ல முத்து ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருக்கிறார். ஸ்ருதி அவ்வளோ லவ் இருக்கும் போது ஏன் இந்த கோபம் எனக் கலாய்த்துவிட்டு செல்கிறார். பின்னர் மீனா, முத்து பேசிக்கொண்டு சாப்பிடுகின்றனர். முன்னவே வர வேண்டியதுதானே என முத்து கேட்க நீங்கதான போக சொன்னீங்க என்கிறார்.

சீதாவுக்கு எனக்கு தெரியாம கல்யாணம் செஞ்சி வச்சள என முத்து கொட்டி விடுகிறார். நீங்க குடிச்சிட்டு வந்தீங்களா என மீனா கொட்ட இருவரும் மாற்றி கொட்டிக்கொண்டு இருக்க இந்த சத்தம் கேட்டு எழும் ஸ்ருதி ரவியிடம் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு என்கிறார்.

ஆனால், ரவி சரிதான். எனக்கெல்லாம் இந்த கொட்டு செட்டாகாது. கோபம் வரும் என்கிறார். ஸ்ருதி அமைதியாக இருந்துவிட்டு படுக்க போகும் போது சத்தம் இல்லாமல் கொட்டிவிட்டு படுத்துக்கொள்ள ரவி திடீரென முழிக்கிறார். பின்னர் குழப்பத்தில் மாற்றி படுத்துகொள்கிறார்.

ஸ்ருதி மீண்டும் கொட்ட என்ன சத்தமே வரலை என முழிக்க பெட்ஷீட்டை எடுத்தால் கால் இருக்க கடுப்பாகி விடுகிறார். இருவரும் பின்னர் முத்து, மீனா குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். விருந்து ஏற்பாடு செய்து இருப்பதாக கூறி சீதா கால் செய்து மீனாவிடம் பேசுகிறார்.

நாளை கண்டிப்பா மாமாவுடன் வீட்டுக்கு வர வேண்டும் என்றும் கூறுகிறார். மீனா தயக்கத்துடன் நான் அவரிடம் பேசி பார்க்கிறேன் எனக் கூறி வைத்துவிட்டு முத்துவிடம் வந்து இந்த விஷயத்தை சொல்ல அவனுக்கு உண்மையா அந்த எண்ணம் இருந்தா அவனே அழைச்சிருப்பான். நான் வரலை என்கிறார்.

மீனா அழுத்தமாக கேட்க இல்லப்பா எனக்கு சவாரி இருப்பதாக சொல்லிவிடுகிறார். மீனா, அம்மா, சத்யா மூவரும் கிளம்பி சீதா வீட்டு விருந்துக்கு செல்கின்றனர். அங்கு சீதாவின் மாமியார் எல்லாரையும் பார்த்து கவனித்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் சீதாவும், அவர் மாமியாரும் கொஞ்சி கொள்கின்றனர். இதை பார்த்த மீனா கண் கலங்குகிறார்.

Next Story