Pandian Stores2: அரசிக்கு தொடரும் சிக்கல்… குமரவேலுவின் எண்ணம் நடக்குமா?

by AKHILAN |
Pandian Stores2: அரசிக்கு தொடரும் சிக்கல்… குமரவேலுவின் எண்ணம் நடக்குமா?
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

காலையில் எழுந்து குடும்பத்தினர் வாசலில் நிற்க கோமதி அய்யோ அய்யோ என கத்திக்கொண்டு இருக்கிறார். கோமதி இனிமே இவ கல்யாணம் நடக்குமா என அழுதுக்கொண்டு இருக்க அந்த சத்தம் கேட்டு அரசி தூங்கி எழுந்து வருகிறார்.

வாசலில் வந்து பார்க்க அங்கு அரசி மற்றும் குமரவேல் இருக்கும் புகைப்படங்கள் போஸ்டர்களாக இருக்க குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். பாண்டியனும் நெஞ்சை பிடித்து நிற்கிறார். அப்போ அரசி வந்து நான் எதுவும் பண்ணலை என அழுதுக்கொண்டே சொல்லுகிறார்.

பாண்டியன் கத்த போக சரியாக அரசி தூக்கத்தில் இருந்து விழுத்து விடுகிறார். அப்போது தான் அது கனவு என்பதே தெரிகிறது. ஆனால் வாச்லைல் அப்பாவுடன் பழனி மற்றும் செந்தில் நின்று என்னவோ பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியாக வர வீட்டில் அலங்கார வேலை நடந்து வருகிறது.

அந்த நேரத்தில் மீனா வர செந்தில் அரசியை கலாய்த்து கொண்டு இருக்கிறார். அவர் ஒரு கட்டத்தில் அரசியை கவனித்து என்ன ஆச்சு பேய் பிடிச்ச மாதிரி இருக்க எனக் கேட்க குமரவேல் எதுவும் பிரச்னை செய்றானா எனக் கேட்க அரசி எதுவும் இல்லை என சமாளிக்கிறார்.

குழலி வீட்டிற்கு வந்துவிட அவர் மருமகள்களை கலாய்த்து கொண்டு இருக்கிறார். அப்போ கோமதி வந்து உட்காருகிறார். மீனாவை ஏன் இவங்களிடம் வாய் அடிக்க மாட்டிங்கிறீங்க எனக் கேட்க அண்ணியிடம் பேசி மாட்டிக்க முடியாது என்கிறார்.

குழலி என்னவென கேட்க அத்தைக்கு மருதாணி வைப்பது குறித்து பேசிக்கொண்டு இருப்பதாக சொல்கிறார். அந்த நேரத்தில் அரசிக்கு கால் வர குமரவேல் என்ன ஜாலியா இருக்க போல. என்கிட்ட இருக்க போட்டோவை வைத்து உன்னை என்ன வேண்டும் என்றாலும் செய்ய முடியும்.

உன்னை இன்னொருத்தனை கட்டிக்க விடமாட்டேன். குடும்பத்தை அசிங்கப்படுத்தாம விடமாட்டேன் என்கிறார். நான் நினைச்சா என்ன வேணும் என்றாலும் செய்வேன். இந்த கல்யாணத்தை நிறுத்துவேன் என்கிறார். ராஜி புடவையை பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறார்.

அப்போ கதிருக்கும் மேட்சிங்காக டிரஸை எடுத்து வைக்கிறார். போட்டோ எடுத்து கொள்வது போல நினைத்து கொள்கிறார். அப்போ கதிர் வர ராஜி எடுத்து வைத்த சட்டையை எடுக்காமல் இன்னொரு சட்டையை எடுத்து செல்கிறார்.

பின்னர் எல்லாரும் கிளம்பிக்கொண்டு இருக்க கோமதி அங்கு நகையுடன் வருகிறார். என்ன நகையை கேட்கவே இல்லை எனக் கேட்க நீங்களே எடுத்துட்டு வருவீங்கனு தெரியும் என்கிறார். தங்கமயில் நகை என்றதும் பதறி விடுகிறார். ராஜிக்கு நகையை கொடுத்துவிட்டு செல்கிறார் கோமதி.

Next Story