Pandian Stores2: அரசி - குமார் கதைக்கு வைக்கப்பட்ட ஃபுல்ஸ்டாப்… ஹப்பாடா தப்பிச்சோம்!

by AKHILAN |
Pandian Stores2: அரசி - குமார் கதைக்கு வைக்கப்பட்ட ஃபுல்ஸ்டாப்… ஹப்பாடா தப்பிச்சோம்!
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

அப்பத்தா அரசியை வீட்டுக்குள் அழைத்து சென்று சமாதானம் செய்கிறார். நீ இவன் பொண்டாட்டியா இங்க இருந்துட்ட அதனால் குமாரை கல்யாணம் செஞ்சிக்கோ எனக் கேட்க அரசி அதிர்ச்சியில் பார்த்து கொண்டு இருக்கிறார். சக்திவேல் குமாரை கண்டப்படி திட்டிக்கொண்டு இருக்கிறார்.

பாண்டியன் வாசலில் வந்து நின்று அரசி என கூப்பிட உள்ளே இருக்கும் அரசி ஓடி வந்து வாசலில் நிற்கிறார். உங்கள அசிங்கப்படுத்த செய்யலை அப்பா. உங்களுக்கு தப்பு நடந்து இருக்க கூடாதுனு தான் செஞ்சேன் என்கிறார். கோமதி பேச வர குறுக்க வராதே என்கிறார்.

சக்திவேல் திமிராக பாண்டியன் சோத்துக்கு அனுப்புனான் எனக் கூற வர அவருக்கும் குறுக்க வராதேனு சொன்னதும் உனக்கும் தான் என்கிறார். அரசியிடம் நீ ஏன்மா உன் வாழ்க்கையை கண்டு யோசிக்கலை என்கிறார். ஆனால் சக்திவேல் இவன் தான் நாடகம் போட்டு இங்க அனுப்பி இருக்கான் என்கிறார்.

அப்பத்தா மற்றும் குமார் அம்மா அரசி, குமாருக்கு கல்யாணம் பண்ணி வைக்க கேட்க சக்திவேல் என்ன புதுசு புதுசா நாடகம் போடுறீங்க என பேசிக்கொண்டே இருக்கிறார். கதிர் அமைதியா இருங்க என சத்தம் போட பாண்டியன் அவரை அமைதிப்படுத்தி விடுகிறார்.

அப்பத்தா மீண்டும் அரசியை கட்டிக்கொடுக்க சொல்ல பாண்டியன் இங்க என் பொண்ணு எப்படி அத்தை நல்லா இருப்பா எனக் கேட்கிறார். குமார் இவளாம் ஒரு மூஞ்சி ஆசைப்பட்டு கட்டிக்கிறாங்க என ஏளனமாக பேச கதிர் கடுப்பாகி அவரை கீழே போட்டு மிதிக்கிறார்.

தடுக்கும் சக்திவேல் என் பையனையே அடிக்கிறீயா எனக் கேட்க கதிரை அடிக்க கை ஓங்க நடுவில் வரும் பாண்டியன் தடுத்து விடுகிறார். என் பொண்ணை கண்ணுக்குள்ள வச்சி பாத்துப்பேன். இவனுக்கு கட்டிக்கொடுக்கவே மாட்டேன். அரசி நீ இனி இங்க இருக்கவே கூடாது என்கிறார்.

உன்ன பார்த்துக்க குடும்பத்துல இவ்வளோ பேர் இருக்கோம் என்கிறார். அரசி சரி சொல்லி பாண்டியனுடன் கிளம்ப இவனே இல்லனு ஆகிட்டு இந்த தாலி எதுக்கு அதை கழட்டி அவன் மூஞ்சில தூக்கி வீசிட்டு வா எனக் கூறுகிறார். அரசியும் ஒரு நிமிடம் யோசித்து பாண்டியன் சொன்னதை செய்துவிட்டு அவருடன் நடக்கிறார்.

Next Story