Pandian Stores2: ஆத்தாடி ஒருவழியா அரசி-குமார் கதைக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு!...

by AKHILAN |
Pandian Stores2: ஆத்தாடி ஒருவழியா அரசி-குமார் கதைக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு!...
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

கதிர், குழலி கோவமாக நின்று கொண்டிருக்க குமார் பைக்கில் வீட்டிற்கு வருகிறார். அவரிடம் சென்று இருவரும் சண்டை போட கோமதி, ராஜு உள்ளிட்டவர்களும் அங்கு வந்து இருவரையும் பிரித்து விட முயற்சி செய்கின்றனர்.

குழலி குமாரை பிடித்து திட்டிக்கொண்டு இருக்க அங்கு இருப்பவர்களுக்கு என்ன விஷயம் என தெரியாததால் அவரிடம் எதற்காக இந்த சண்டை என கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சக்திவேல் என் பையனையே எதுக்கு நீ கையை ஓங்குற என திட்டிக் கொண்டிருக்கிறார்.

கடுப்பான குழலி குமார் ஒரு பெண்ணுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அவளை பைக்கில் வைத்து கட்டி பிடித்துக் கொண்டு ஊர் சுற்றிய கதையையும் சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இதில் கடுப்பான குடும்பத்தினர் குமாரை திட்ட அவர் நான் அப்படித்தான் செய்வேன் என பேசுகிறார்.

இதில் கடுப்பான கதிர் குமாரை அடிக்க பாய அவரை பிடித்து ராஜி அமைதிப்படுத்துகிறார். இதெல்லாம் ஒரு மூஞ்சா, இவளுக்காக நான் சும்மா இருக்கணுமா என குமார் ஓவராக பேச கதிர் கடுப்பாகி கல்லை எடுத்துக்கொண்டு வருகிறார்.

அவரை குடும்பத்தினர் பிடித்து கொள்கின்றனர். குமார் இடையில் வந்து கதிரை அடிக்க பாய அரசி உள்ளே வந்து எங்க அண்ணனை அடிக்கிற வேலை வச்சிக்காதீங்க. என்கிறார். இதில் கடுப்பான சக்திவேல் இவன் என் பையனை அடிச்சப்போ நீ என்ன செஞ்சிட்டு இருந்த என சத்தம் போடுகிறார்.

இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்க உள்ளே வரும் அரசி கதிரை அமைதிப்படுத்துகிறார். நீ இவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் உன் வாழ்க்கையை எடுத்துக்க வேணாம். இதெல்லாம் ஒரு ஆளே இல்ல என்கிறார்.

ஒரு கட்டத்தில் இவன் என் புருஷனே இல்லை என அரசி கூற அவர் கோபத்தில் கூறுவதாக அப்பத்தா மற்றும் குமாரின் அம்மா அரசியை சமாதானம் படுத்த முயற்சி செய்கின்றனர். குமார் சந்தோசத்தில் நீ மனசுல வச்சிருந்ததை இப்பவே சொல்லு என அவரை ஏற்றி விடுகிறார்.

அரசி தன்னுடைய திருமணத்தில் நடந்த ரகசியத்தை மொத்த குடும்பத்தினருக்கு முன்பும் போட்டு உடைத்து விடுகிறார். யாருக்கும் எதுவும் தெரியாமல் திணறிக் கொண்டிருக்க அப்பத்தா அரசியை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். குமார் குடும்பத்தினரும் உள்ளே செல்ல கோமதி குடும்பத்தினர் அதிர்ச்சியில் அங்கையே நிற்கின்றனர்.

Next Story