Gossip: சன் நடிகர் வரலாறு படத்தை மிஸ் பண்ணதுக்கு பின்னாடி இத்தனை விஷயம் இருக்கா?

Gossip: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்த அந்த புதிய ’தொடக்கம்’ பட நிறுவனத்தின் சோதனை பிரச்னை தான். இதில் நடிகர்கள் பெயர் வேறு உருண்டு வருகிறது.
அவ்வப்போது ஒவ்வொரு மொழி உலகமும் எக்கசக்கமாக சர்ச்சையில் சிக்கி கொள்வார்கள். அந்த வகையில் இந்த முறை தொடக்கம் என்ற ஒரு நிறுவனம் சமீபத்தில் எக்கசக்கமாக புகழ் உச்சிக்கு சென்றது. பெரிய நிறுவனங்களே தயங்கியதை அசால்ட்டாக செய்தனர்.
அவர்களின் தயாரிப்பில் ஒரே நேரத்தில் கன் வாங்கிய நடிகர், சுள்ளான், வம்பு நடிகர் என வரிசையாக ஒப்பந்தமாகி வந்தனர். இனிமேல் இவர்கள் கையில் தான் கோலிவுட் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இவர்கள் அலுவலகத்தில் ரெய்ட் நடந்தது.
இதுவும் சாதாரண போல தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சோதனையின் போது நிறுவனத்தின் சிஇஓ இருவரும் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுவரை இருவருமே ஆஜாராகாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர்களுக்கு தற்போது தொல்லை தொடங்கி இருக்கிறது.
இதில் கன் வாங்கிய நடிகருக்கு பெரிய மன வருத்தமாம். இதுவரை மொக்கை படங்களை நடித்தவர். சமீபகாலமாக தான் கெத்து காட்டி வந்தார். ஆடு படத்தில் கன்னை வாங்கிவிட்டு இனி நான்தான் எல்லாம் என பில்டப் தந்தார். ஆனால் இப்போ எல்லாமே அந்தரத்தில் நிற்கிறது.
பிக்பவர் படத்தில் அவர் இப்போது நடித்து வருகிறார். இதற்கு முன் இப்படத்திற்கு பழைய வரலாற்று பெயர் ஒன்றை வைத்து இருக்கின்றனர். அதில் நடிக்க அந்த சன் நடிகரையும் ஓகே செய்துவிட்டனர். ஆனால் பிரபல அரசியல் கட்சியிடம் இருந்து ஒரு அழுத்தம் படத்தின் பெயரை பிக்பவர் என மாற்றக்கூறினார்களாம்.
ஆனால் சன் நடிகர் இது என்னடா வம்பா போச்சு. எனக்கே அக்கட தேச ஆசைதான் இப்போ முக்கியம் என இந்த படத்தை தலை முழுகிவிட்டாராம். இதை தொடர்ந்தே ஆர்மி பட ஜோரில் இருந்த நடிகரை வலைத்து மூன்று மடங்கு சம்பளம் கொடுத்து அழைத்து வந்தனராம். இப்போ அதுவும் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.