தோல்விக்கான காரணம் இதுதானா? கடைசியில் கண்டுபுடிச்சிட்டாரே சூர்யா

suriya 2
Suriya: சமீப காலமாக வெளியாகும் சூர்யாவின் படங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த படத்திற்கு முன்பு கங்குவா திரைப்படம் வெளியாகி ஒரு கடும் விமர்சனத்தை சந்தித்தது. படம் மட்டுமல்ல படத்தில் நடித்த சூர்யாவையும் அனைவருமே பெரிய அளவிலே ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
இன்று தமிழ் சினிமாவில் ஒரு மதிக்கத்தக்க நடிகராக இருப்பவர் சூர்யா. நடிப்பையும் தாண்டி அவருடைய சமூக சேவை சார்ந்த சில செயல்கள் அனைவரையும் மிகவும் ஈர்த்துள்ளது. அவருடைய அறக்கட்டளை சார்பாக ஆயிரக்கணக்கான மாணவர்களை படிக்க வைத்து இன்று அவர்கள் அனைவருமே பெரிய பெரிய வேலையில் இருக்கிறார்கள். இப்படி சினிமா ஒரு பக்கம் சமூக சேவை ஒரு பக்கம் என ஒரு நல்ல மனிதராகவும் இருந்து வருகிறார் சூர்யா.
ஆனால் அவரைப் பற்றி சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பலவகையான கருத்துக்கள் பரவி வருகின்றன. அவருக்கு எதிராக சில கும்பல் சதி செய்து வருகிறது என்றே சொல்லலாம். இன்னொரு பக்கம் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதால் அவர் மும்பை வாசியாகவே மாறிவிட்டார் என்ற ஒரு கோபத்திலும் இங்கு அவருக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதன் காரணமாக கூட அவருடைய படங்களை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். எப்படி இருந்தாலும் கண்டெண்ட் நன்றாக இருந்தால்தான் மக்கள் அதை ரசிப்பார்கள் என்பது ஒரு உண்மை. இந்த நிலையில் தனக்கு தொடர்ந்து தோல்வியே வரும் நிலையில் இதைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாராம் சூர்யா ..அவருடன் மிகவும் நெருக்கமான ஒருவர் ராஜசேகர் பாண்டியன்.
2டி நிறுவனத்தில் ஒரு முக்கிய புள்ளியாக இருப்பவர். அவரை தாண்டி சூர்யாவை யாரும் நெருங்க முடியாது. அந்த அளவுக்கு சூர்யாவை சுற்றி இந்த ராஜசேகர் பாண்டியன் தான் ஒரு வேலி போட்டு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் சூர்யா சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறாராம். ராஜசேகர் பாண்டியனிடம் குறிப்பிட்டு சில பொறுப்புகளை மட்டுமே ஒப்படைத்துவிட்டு தன்னுடைய குழந்தை பருவ நண்பர் ஒருவரை மீதம் உள்ள பொறுப்புகளை கவனிப்பதற்காக நியமித்திருக்கிறாராம்.
இப்படி தன்னுடைய நிறுவனத்தில் இருக்கும் சில பொறுப்புகளை ஆளாளுக்கு பிரித்து கொடுத்து இருக்கிறாராம் சூர்யா. இது ஒரு தொடக்கம் தான். இதற்கு மேலாவது சூர்யாவின் கரியரில் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.