பராசக்தி படத்தின் இன்னொரு ஹீரோ!.. அதர்வாவின் பிறந்தநாளுக்கு செம பரிசு கொடுத்த சுதா கொங்கரா!..

#image_title
இன்று நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் சுதா கொங்கரா அவருக்கு வாழ்த்து தெரிவித்து பராசக்தி படப்பிடிப்பில் எடுத்த வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா முரளி பாணா காத்தாடி திரைப்படம் மூலம் கதநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், இரும்பு குதிரை, சண்டி வீரன், கணிதன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், நிறங்கள் மூன்று போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இயக்குநர் பாலா இயக்கத்தில் அதர்வா நடித்திருந்த பரதேசி படத்திற்காக சிறந்த நடிக்கருகான விருதையும் வென்றார்.
அதை தொடர்ந்து அதர்வா ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கி வரும் இதயம் முரளி படம் அவரது தந்தையின் புகழ்பெற்ற இதயம் படத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்ஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இதையடுத்து, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்திலும் அதர்வா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும், இப்படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, பசில் ஜோசப், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பராசக்தி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு போட்டியாக வெளியாகிறது.

இந்நிலையில், இன்று அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் சுதா கொங்கரா பராசக்தி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து, அதில் ”நான் உன்னை முதல் முதலாக பரதேசி படத்தில் சின்ன பிள்ளையாக பார்த்த நியாபகம் இருக்கிறது, இப்பொது உன்னை வைத்து இயக்குகிறேன், பிறந்தநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சந்தீப் கிஷன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று லைகா ஜேசன் சஞ்சய் அவரை வைத்து இயக்கும் பிறந்தநாள் வீடியோ வெளியானது.