ரஜினி பொண்ணுக்கே ஆப்படித்த அமேசான்!.. அங்க போயும் வாலாட்டினா இப்படித்தான்!…

#image_title
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. இவருக்கு சினிமா இயக்கத்தில் அதிக ஆர்வம் உண்டு. அப்பா ரஜினியை கார்டூனில் காட்ட ஆசைப்பட்டு கோச்சடையான் படத்தை எடுத்தார். ரஜினியை லைவ்வாக மட்டுமே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு அவரை கார்ட்டூன் போல பார்க்க பிடிக்கவில்லை. அதனாலேயே இந்த படம் தோல்வி அடைந்தது.
இத்தனைக்கும் சரத்குமார், ஷோபனா, தீபிகா படுகோனே, ஆதி, ஜாக்கி ஷெரப், நாசர் போன்றவர்களின் உருவங்களை கார்ட்டூனில் கொண்டு வந்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்கள் நன்றாக இருந்தாலும் படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, இப்படம் தோல்வி அடைந்தது.
இந்த படத்தை ஈரோஸ் இண்டர்நேஷனல் என்கிற நிறுவனத்தோடு இணைந்து தயாரித்திருந்தார் சவுந்தர்யா. ஆனால், படம் தோல்வி என்பதால் ஈரோஸ் நிறுவனத்திற்கு சௌந்தர்யா தரப்பில் சில கோடிகளை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அதை அவர் கொடுக்காததால் அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. பல வருடங்கள் அந்த வழக்கு நடந்தது.
தற்போது மீண்டும் அதுபோல ஒரு சிக்கலில் மாட்டியிருக்கிறார் சௌந்தர்யா. அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனத்திற்காக குருதிப்புனல் என்கிற வெப் சீரியஸை தயாரித்து வருகிறார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் என்பதால் அமேசான் நிறுவனம் கொடுத்த பணத்திற்குள் வெப் சீரியஸை முடித்துவிட வேண்டும்.
ஆனால், வெப் சீரியஸ் 80 சதவீதம் முடிந்த நிலையில் அமேசான் கொடுத்த பணம் செலவாகி விட்டது. சரி அமேசான் நிறுவனம் கேட்டால் மீதியை முடிக்க பணம் கொடுப்பார்கள் என நினைத்து அவர்களிடம் கேட்டிருக்கிறார் சௌந்தர்யா. ஆனால், கார்ப்பரேட் நிறுவனம் என்பதால் கறாராக முடியாது என சொல்லிவிட்டார்களாம். எனவே, என்ன செய்வது என யோசித்து வருகிறாராம் சவுந்தர்யா.