இதென்னடா சூரிக்கு வந்த சோதனை!.. ஒரே படத்துல இப்படியொரு நிலைமையா?.. விக்ரம் ரூட்டை பிடிச்சிட்டாரே!

by Saranya M |   ( Updated:2025-05-06 09:28:42  )
சூரி
X

#image_title

இயக்குநர் புகழேந்தி மதிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் மண்டாடி படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்த படக்குழு தற்போது படத்தின் இன்னொரு அப்டேட்டையும் அறிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்த நடிகர் சூரி விடுதலை 1 படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 என பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். "கொட்டுக்காளி" படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் பெற்று நடிகர் சூரியின் நடிப்பை பற்றி சர்வதேச அளவில் பேசப்பட வைத்தது.

நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக தொடங்கி தற்போது கதாநாயகனாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சூரியின் இந்த மாற்றத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மாமன் படத்தின் டீசரை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்து விட்டனர்.

அடுத்ததாக இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள மண்டாடி திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ், சாச்சனா, அச்சுத் குமார், ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மண்டாடி படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் மண்டாடி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஒருவாகி வருவதாகவும், தமிழில் சூரி ஹீரோவாக சுஹாஸ் வில்லனாகவும், தெலுங்கில் சுஹாஸ் ஹிரோவாக சூரி வில்லனாகவும் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். நகைச்சுவை நடிகர் மற்றும் ஹீரோவாக பார்த்த சூரியை தற்போது வில்லனாகவும் பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நகைச்சுவை மற்றும் ஹீரோ கேரக்டரில் பெற்ற வரவேற்பை வில்லனாகவும் பெருவாரா சூரி என பார்க்க ரசிகர்கள் ஆர்வம்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் சீயான் விக்ரம் இப்படியொரு முயற்சியை செய்திருந்தார். தமிழில் நெகட்டிவ் ரோலில் ஐஸ்வர்யா ராயை கடத்தும் நபராகவும் இந்தியில் ஐஸ்வர்யா ராயின் கணவராகவும் நடித்திருப்பார். அதே ரூட்டில் தற்போது சூரி செல்கிறார்.

Next Story