ஐஸ்வர்யா ராய்க்கு அப்புறம் அழகுல மயக்குன நம்ம கோலிவுட் குயின்.. சுஹாசினி சொன்ன நடிகை

by Rohini |   ( Updated:2025-05-06 08:11:36  )
aishu
X

aishu

Aishwarya Rai: பெண்களை வர்ணிக்க எத்தனையோ பெயர்கள் நம் தமிழ் மொழி அகராதியில் இருக்கின்றன. ஆனால் எப்போது உலக அழகி பட்டத்தை ஐஸ்வர்யா ராய் தட்டிச் சென்றாரோ அதிலிருந்தே எந்த பெண்ணை பார்த்தாலும் பெரும்பாலானோர் உச்சரிப்பது ஐஸ்வர்யா ராய் தோற்றுவிடுவார் என்றுதான். அல்லது சொல்லிக் கொள்ளும்படியான அழகு இல்லை என்றாலும் ‘பெரிய உலக அழகி’என ஏளனமாக சொல்வதையும் வழக்கமாக கொண்டனர்.

இப்படி அழகுக்காக ஐஸ்வர்யா ராய் பெயரையே சில காலமாக நாம் உச்சரித்து வருகிறோம். அந்தளவுக்கு ஐஸ்வர்யா ராய் உண்மையிலேயே அழகுதான். குறிப்பாக அவருடைய கண்களைத்தான் பெருமையாக சொல்வார்கள். ஏன் பொன்னியின் செல்வன் பட விழாவில் கூட சிம்பு பேசும் போது பள்ளி பருவத்தில் ஏதாவது ஒரு படம் வரைய சொன்னார்கள். அப்போது ஐஸ்வர்யா ராயின் படத்தைத்தான் வரைந்தேன்.

மிகவும் அழகாக இருந்தது. இப்போதுதான் தெரிகிறது ஏன் அவ்வளவு அழகாக வந்தது என்று? ஏனெனில் நேரில் பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கிறார். அதனால்தான் நான் வரைந்த படமும் அழகாக வந்தது என கூறினார். இப்படி அழகின் பெருமையாக பார்க்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கு பக்கத்தில் வைத்து ஒரு நடிகையை பார்த்தேன் என்றால் இவர்தான் என ஒரு நடிகையை பற்றி குறிப்பிட்டிருக்கிறார் நடிகை சுஹாசினி.

அவர் வேறு யாருமில்லை. நடிகை சிம்ரன். 1996 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்திற்காக மணிரத்னம் அலுவலகத்திற்கு வந்தாராம் சிம்ரன். இயக்குனர் வசந்த் தான் அழைத்து வந்தாராம். அவரை முதன் முதலில் பார்த்தது சுஹாசினிதானாம். அப்படியே நடந்து வரும் போது சிம்ரன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிந்தாராம். அதே நேரம் மிகவும் சிம்பிளாகவும் இருந்திருக்கிறார்.

simran

உடனே சிம்ரனை உட்கார வைத்துவிட்டு நேராக மணிரத்னத்திடம் ‘இவ்வளவு அழகான பெண் வசந்த் படத்தில் நடிக்கிறாங்க. ஏன் உங்க படத்துல நடிக்கல? அவங்க உங்க படத்துலதான் நடிக்கணும்’ என சொல்லியிருக்கிறார். உடனே மணிரத்னம் ‘முதலில் அவங்க நடிக்கட்டும்’ என சொன்னாராம். இதை ஒரு மேடையில் சிம்ரனை வைத்தே பேசிய சுஹாசினி ‘அப்போதுதான் இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராயை நாங்க அறிமுகம் செய்தோம். சிம்ரனை பார்த்ததும் அப்படியே ஐஸ்வர்யா ராய்க்கு பக்கத்தில் வைத்து பார்க்கிற அழகில் இருந்தார்’ என கூறினார்.

Next Story