இந்த தடவ மிஸ்ஸே ஆகாது! தரமான சம்பவம் லோடிங்.. வெளியான ‘ரெட்ரோ’ பட டிரெய்லர்

by Rohini |   ( Updated:2025-04-18 09:07:20  )
retro1
X

retro1

Retro : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. இதில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான லுக்கில் சூர்யா நடித்திருக்கிறார். மிரட்டலான கதையில் இந்தப் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருக்கிறார் .படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம், பிரேம்குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்தப் படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது .படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் படத்தில் யாரெல்லாம் நடித்திருக்கிறார்களோ அவர்களின் கதாபாத்திரங்களையும் சேர்த்து ஒவ்வொன்றாக அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். இதில் சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் பாரிவேல் கண்ணன் என்றும் பூஜாவின் கதாபாத்திரத்தின் பெயர் ருக்மணி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி கதாபாத்திரங்களின் பெயர்களை அழகான தமிழில் வைத்துவிட்டு படத்திற்கு மட்டும் ஏன் ரெட்ரோ என பெயரிட்டனர் என்று தான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான சம்பவத்தை காட்டி இருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் எப்பேர்பட்ட ஒரு நெகட்டிவ் விமர்சனத்தை எதிர்கொண்டது என அனைவருக்கும் தெரியும். அதனால் அடுத்த படத்தை கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தான் சூர்யாவும் செயல்பட்டார்.

அதற்கு ஏற்ப ரெட்ரோ திரைப்படம் அவருக்கு ஒரு பெரிய கம் பேக் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப இந்த படத்தின் டிரைலரில் பல விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சூர்யாவின் லுக்கில் இருந்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், ஸ்டைலிஷ் ஆன கெட்டப் என அனைத்துமே மக்களை ஈர்த்துள்ளது. ட்ரெய்லரை பார்த்த அனைவருமே சிறப்பான தரமான சம்பவங்களை இனி பார்ப்பீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ட்ரெய்லரை அல்போன்ஸ் புத்திரன் தான் கட் செய்து இருக்கிறார். ட்ரெய்லர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இது முழுக்க முழுக்க கார்த்திக் சுப்பாராஜின் படமாக தான் இருக்கப் போகிறது. அதையும் இந்த ட்ரெய்லரில் காட்டி இருக்கிறார்கள்.

இதோ அந்த டிரெய்லர்

Next Story