ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேம்லி படங்களின் 4வது நாள் வசூல்… எது மாஸ்னு பாருங்க..!

by sankaran v |   ( Updated:2025-05-04 21:18:55  )
tourist family retro
X

tourist family retro

Retro and tourist family: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ரெட்ரோ. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பவாவது கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியானது. படத்திற்கு ஆரம்பத்தில் பாசிடிவான விமர்சனமும், போகப்போக கலவையான விமர்சனமும் கிடைத்தது. படத்தின் வசூலைப் பார்க்கும்போது முதல் நாள் அதிகமாக இருந்தது.

அடுத்தடுத்த நாள்கள் கணிசமாகக் குறைந்தது. அதே நாளில் வெளியான மற்றொரு படம் சசிக்குமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேம்லி. இந்தப் படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவந்த். 24 வயதான இளம் இயக்குனர் இவர். இந்தப் படத்தின் கதையை நம்பி சசிக்குமார் நடித்துள்ளார். படம் யாருமே எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றுள்ளது.

சின்ன பட்ஜெட் படமாக இருந்தபோதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாளுக்கு நாள் படத்தின் வசூலும் எகிறிக்கொண்டே போகிறது. இப்போது இந்த இரு படங்களின் பட்ஜெட் மற்றும் இந்திய அளவிலான வசூல் விவரங்களைப் பார்ப்போம். அதன்படி எந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் என்று நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்.

#image_title

4 நாள் வசூல் எவ்வளவுன்னு பார்க்கலாமா…

Retro முதல் நாள் வசூல் 19.25 கோடி, 2வது நாள் வசூல் 7.75 கோடி, 3வது நாள் வசூல் 8 கோடி, 4வது நாள் வசூல் 8 கோடி ஆக மொத்தம் 43 கோடியை வசூலித்துள்ளது. ரெட்ரோ படத்தின் பட்ஜெட் 65 கோடி. ரெட்ரோ படத்தின் உலகளவிலான வசூல் 75.3கோடி முதல் 76.3கோடி வரை என்று சொல்லப்படுகிறது.

டூரிஸ்ட் ஃபேம்லி படத்தின் முதல் நாள் வசூல் 2 கோடி, 2வது நாள் வசூல் 1.7கோடி, 3வது நாள் வசூல் 2.5 கோடி, 4வது நாள் வசூல் 3.50 கோடி என மொத்தம் 9.70கோடியைத் தொட்டுள்ளது. டூரிஸ்ட் ஃபேம்லி படத்தின் பட்ஜெட் புரொமோஷன் உள்பட 16 கோடி. டூரிஸ்ட் ஃபேம்லி படத்தின் உலகளவிலான வசூல் 12 முதல் 12.5 கோடி வரை என்று சொல்லப்படுகிறது.

Next Story