ஓடிடியில் நம்பர் ஒன்!.. அடிச்சி தூள் கிளப்பும் தக் லைப்!.. பரபர அப்டேட்!....

Thug life ott: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து ஜூன் 5ம் தேதி வெளியான திரைப்படம் தக் லைப். கமலும் மணிரத்னமும் 38 வருடங்கள் கழித்து ஒன்று சேர்ந்ததால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இன்னொரு நாயகனை இருவரும் கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
படத்தில் சிம்புவும் இருந்ததால் ஹைப் இன்னும் அதிகரித்தது. மேலும், அபிராமி, திரிஷா, நாசார், ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் படமாக தக் லைப் உருவாகியிருந்தது. இந்த படத்திற்காக பல நாட்கள் பல ஊர்களுக்கும் பறந்து பறந்து புரமோஷன் செய்தது படக்குழு. கமலும் நிறைய பேசினார்.

நாயகனை விட சிறப்பான ஒன்றை கொடுக்க முயற்சி செய்திருக்கிறோம் என கமல் சொன்னார். ஆனால், படம் வெளியான பின் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. கமலுக்கு சின்ன வீடு திரிஷா.. கமலை கொன்றுவிட்டு திரிஷாவை சிம்பு கீப்பாக வைத்துக்கொள்கிறார் என காட்சிகள் வைத்ததை ரசிகர்கள் ட்ரோல் செய்தார்கள்.
கமலும், சிம்புவும் சிறப்பாகவே நடித்திருந்தனர். ஆனால், அது பேசப்படவில்லை. ஆக்ஷன் காட்சிகளும் தரமாக இருந்தது. அதை யாரும் பாராட்டவில்லை. சிலரோ படம் நன்றாகவே இருந்தது என சொன்னார்கள். ஆனால், மொத்தமாக எழுந்த நெகட்டிவ் விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிசில் இப்படம் தோல்வி அடைந்தது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஷ்டமும் ஏற்பட்டது.

படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிடுவேன் என கமல் சொன்னார். தியேட்டர் அதிபர்கள் அவரை பாராட்டினார்கள். ஆனால், படம் சரியாக போகவில்லை என்பதால் 4 வாரத்திலேயே அதாவது ஜூலை 3ம் தேதியே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தக் லைப் வெளியானது. இந்நிலையில், தியேட்டரை காட்டிலும் ஓடிடியில் இப்படம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
முதல் வாரத்தில் 24 லட்சம் வியூஸை பெற்று இந்திய அளவில் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்களின் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்தது. தற்போது முன்னேறி முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஜுலை 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை இப்படத்திற்கு 33 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது. இப்படத்திற்கு 130 கோடி விலை பேசியது நெட்பிளிக்ஸ். ஆனால், தியேட்டரில் சரியாக போகவில்லை என்பதால் 20 கோடி குறைக்கப்பட்டு 110 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தகது.