OTT: மீண்டும் குபேரா vs டிஎன்ஏ… இந்த முறை வெற்றி யாருக்கு? களைக்கட்டும் இந்த வார ஓடிடி லிஸ்ட்!

by AKHILAN |
OTT: மீண்டும் குபேரா vs டிஎன்ஏ… இந்த முறை வெற்றி யாருக்கு? களைக்கட்டும் இந்த வார ஓடிடி லிஸ்ட்!
X

OTT: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வாரா வாரம் வெளியாகும் ஓடிடி லிஸ்ட்கள் எப்போதுமே சுவாரஸ்யமானதாக இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் குறித்த தொகுப்புகள்.

ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த வாரம் நிறைய நல்ல ரிலீஸ் லிஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறது. அதர்வா, நிமிஷா நடிப்பில் வித்தியாசமான திரில்லர் படமாக வெளிவந்த டிஎன்ஏ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்தியில் சூப்பர்ஹிட் அடித்த ஸ்பெஷல் ஓபிஎஸ் வெப்சீரிஸ் இரண்டாம் பாகமும், ஆங்கிலத்தில் வெளியான ஷ்ரேஞ்ச் நியூ வேர்ல்ட் உள்ளிட்ட படங்கள் ஹாட்ஸ்டார் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா நடிப்பில் வெளியான குபேரா பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

ஆஹா ஓடிடியில் மனிதர்கள் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஜீ5 ஓடிடியில் பைரவம், இந்தியில் தி பூட்னி, சட்டமும் நீதியும் வெப்சீரிஸ் ரிலீஸுக்கு வெளியாகி இருக்கிறது. கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் ரிலீஸாகி இருக்கிறது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வாரம் தமிழ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆங்கில படங்களான Trigger, Untamed, RiffRaff, TheCursed, TheAssessment இந்த வாரம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்தே திரையரங்கில் நல்ல ரீச் கொடுத்த படங்கள் ஓடிடியில் வேறுமாதிரியான ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த முறை குபேரா, டிஎன்ஏ படங்கள் என்னமாதிரியான வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story