‘லவ் டுடே’ வெற்றியால் காணாமல் போன இயக்குனர்! இப்படி ஒரு ஆஃபர் வரும்னு நினைக்கல

love
Love Today: தமிழ் சினிமாவே பாதாளத்தில் கிடந்த போது அதிலிருந்து ஏறி ஒரு வெற்றியை நோக்கி பயணிக்க வைத்த படம் என்றால் அது லவ் டுடே திரைப்படம்தான். அதுவரை அந்தாண்டுகளில் எந்தவொரு பெரிய படங்களும் பெரிய வசூலை பெறவில்லை. எதிர்பார்த்த படங்கள் எல்லாமே தோல்வியையும் கடுமையான விமர்சனத்தையுமே சந்தித்தது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் அசால்ட்டா வந்து இமாலய வெற்றிப்பெற்ற திரைப்படம்தான் லவ் டுடே.
அதுவும் கோமாளி படத்தை எடுத்து முடித்த கையோடு இரண்டாவது படத்திலேயே அதுவும் ஹீரோவாக தானே நடித்து மிகப்பெரிய நம்பிக்கையில் வந்தார் பிரதீப் ரங்கநாதன். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 100 கோடி கிளப்பில் இணைந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்த படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றி பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
அதே படத்துடன் ரிலீஸான திரைப்படம்தான் ‘ நித்தம் ஒரு வானம்’. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை ரா. கார்த்திக் இயக்கினார். ஆனால் நித்தம் ஒரு வானம் திரைப்படம் அடிப்படையில் ஒரு நல்ல கதை. ஆனால் லவ் டுடே ஏற்படுத்திய அலை இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் பார்வையை திரும்ப வைக்கவில்லை. அதனால் அந்த இயக்குனர் ஓடிடிக்காக பிரியா மோகனை வைத்து வுமன் சென்ட்ரிக் படத்தை எடுத்து வருகிறார்.
இருந்தாலும் திறமை உள்ளவனுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் இருக்கும் என்பது உண்மை. அப்படித்தான் நித்தம் ஒரு வானம் படத்தின் இயக்குனருக்கும் ஒரு பெரிய ஆஃபர் வந்திருக்கிறது. தெலுங்கில் நாகர்ஜூனாவின் 100 வது படத்தை இவர்தான் இயக்க போகிறாராம். ஏற்கனவே நாகர்ஜூனாவிடம் கதை சொன்னதால் அந்த கதை நாகர்ஜூனாவுக்கு பிடித்து போயிருக்கிறது.

அதனால் தன்னுடைய 100வது படத்தை அசால்ட்டாக தூக்கிக் கொடுத்திருக்கிறார் நாகர்ஜூனா. இரண்டாவது படமே பெரிய படம். பெரிய ஹீரோ. அதனால் பெரிய ப்ரஷரில் தான் இருக்கிறார் கார்த்திக்.