டைரக்டரா தீயா வேலை பார்க்குறாரே ஜேசன் சஞ்சய்!.. வீடியோ செம மாஸ்!...

by சிவா |   ( Updated:2025-05-07 01:15:16  )
sandeep
X

#image_title

ason Sanjay: தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக இருப்பவர் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய். பள்ளி படிப்பு வரை சென்னையில் அப்பாவுடன் இருந்தார். ஆனால், கடந்த சில வருடங்களில் அம்மாவுடன் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். விஜயின் மனைவி, மகன், மகள் ஆகிய எல்லோருமே லண்டனில் வசித்து வருகிறார்கள்.

ஜேசன் சஞ்சய் சிறுவனாக இருக்கும்போது வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜயுடன் ஒரு பாடலுக்கு நடுவில் வந்து நடனமாடினார். அதன்பின் சில புகைப்படங்கள் மட்டுமே வெளியானது. விஜய்க்கும் அவரின் மனைவி சங்கீதாவுக்கும் இடையே சுமூகமான உறவு இருக்கிறதா என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில், விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தனியாகவே வசித்து வருகிறார்.

#image_title

சில வருடங்களுக்கு முன்பு விஜயின் மகன் ஜேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை லைக்கா தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. ஏனெனில், ஜேசன் நடிகராக வருவார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ இயக்குனராக வந்துவிட்டார்.

அறிவிப்பு வெளியானாலும் படத்தில் வேலைகள் துவங்கப்படாமலேயே இருந்தது. ஒருபக்கம் இப்படத்திற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் ஜேசன் ஈடுபட்டிருந்தார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஷூட்டிங்கும் துவங்கப்பட்டது. இந்நிலையில், ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜேசன் இயக்குனராக வேலை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

#image_title

மேலும், இன்று சந்தீப் கிஷணின் பிறந்தநாள் என்பதால் ஷூட்டிங் ஸ்பாட் தொடர்பான வீடியோவை லைக்கா நிறுவனம் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறது. இந்த படத்தில் தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

Next Story