இப்பதான் நல்ல முடிவெடுத்தாரு சந்தானம்!.. இது மட்டும் நடந்தா மறுபடியும் ஹீரோதான்!…

#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம். அதன்பின் சிம்பு நடித்த மன்மதன் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் முக்கிய காமெடி நடிகராக மாறினார். ஜீவா, ஆர்யா, சிம்பு, விஷால், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என பல இளம் நடிகர்களுடன் நடித்தார்.
சந்தானம் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்ததால் படம் முழுக்க ஹீரோவோடு உடன் வரும் கதாபாத்திரமே அவருக்கு அதிகம் கொடுக்கப்பட்டது. அதில் தன்னால் என்ன முடியுமோ அதை செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். சந்தானத்திற்கு என தனி குழு இருக்கிறது. அவர்கள் விஜய் டிவில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் அவருடன் நடித்தவர்கள்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கர், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களிலும் ரசிகர்களை சிரிக்க வைத்தார் சந்தானம். விஜய், அஜித் ஆகியோரின் சில படங்களிலும் நடித்தார். சந்தானத்தின் காமெடிக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உருவானது. ஆனால், இனிமேல் காமெடி நடிகராக நடிக்கமாட்டேன் என முடிவெடுத்து சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
அப்படி அவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை ஓடவில்லை. தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ் போன்ற படங்கள் மட்டுமே ஓடியது. பேய் படம்தான் நமக்கு ஓடுகிறது என முடிவெடுத்து இப்போது டிடி நெக்ஸ்ட் லெவல் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 16ம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் இப்போது காமெடி வறட்சியே நிலவுகிறது. தியேட்டரில் ரசிகர்கள் யாரும் சிரிப்பது இல்லை. ஏனெனில், காமெடி நடிகர்களே இப்போது கோலிவுட்டில் இல்லை. எனவே, சந்தானம் மீண்டும் காமெடி செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில்தான் சிம்பு 49 படத்தில் அவருடன் நடிக்கிறார் சந்தானம். இந்த பட மேடையில் பேசிய சிம்பு இனிமேல் சந்தானத்தை அதிக படங்களில் பார்க்கலாம் என நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

இந்த படத்திற்கு பின் கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சந்தானம். கவுதம் மேனன் காமெடி படம் எடுக்கும் இயக்குனர் இல்லை. கண்டிப்பாக ஆக்சன் கலந்த காதல் படமே எடுப்பார். ஒருவேளை அந்த படம் ஒடிவிட்டால் சந்தானத்திற்கு மீண்டும் ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்துவிடும். காமெடியனாக நடிக்கமாட்டார் என்கிற எண்ணமும் வருகிறது.
என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!…