படம் ஃபுல்லா பிட்டு சீன் தான் போல!.. பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்பிரிட் படத்தில் இவங்க தான் ஹீரோயினாம்!..

by SARANYA |   ( Updated:2025-05-25 15:30:30  )
படம் ஃபுல்லா பிட்டு சீன் தான் போல!.. பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்பிரிட் படத்தில் இவங்க தான் ஹீரோயினாம்!..
X

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கப் போற படத்துக்கு ஸ்பிரிட் என டைட்டில் வைத்துள்ளனர். கல்கி 2898 ஏடி படத்துக்குப் அப்புறம் பிரபாஸ் என்ன செய்றாரு, அவரோட அடுத்த படம் என்னன்னே யாருக்கும் தெரியல? கமல்ஹாசன் கல்கி படத்துல வில்லனா நடிச்சிட்டு இப்போ தக் லைஃப் படத்துல ஹீரோவாவே நடிச்சு அடுத்த மாசம் படத்தை வெளியிட போறாரு.

சலார் 2, கல்கி 2, ராஜா சாப் என வரிசையாக படங்களை வைத்திருக்கும் பிரபாஸ் அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். கூடிய சீக்கிரமே அந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்குது.


முதலில் இந்த படத்தில் தீபிகா படுகோன் தான் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திருமணமாகி குழந்தையும் பெற்ற நிலையில், இதற்கு மேல் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடிக்க வேண்டாம் என தீபிகா படுகோன் முடிவு செய்துவிட்டாரா அல்லது அதற்கு மேலும், மோசமான காட்சிகள் படத்தில் இருக்கா என்பது தெரியவில்லை. அதிரடியாக அவர் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகி அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி விட்டார்.

மிருணாள் தாகூர் தான் ஸ்பிரிட் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அனிமல் படத்தில் பலான காட்சியில் நடித்த செகண்ட் ஹீரோயின் திருப்தி டிம்ரி தான் ஹீரோயின் என அதிகாரப்பூர்வமாகவே சந்தீப் ரெட்டி வங்கா அறிவித்துவிட்டார்.


அனிமல் படத்தை விட ஸ்பிரிட் படம் ரொம்பவே ஆபாசமான காட்சிகளுடன் இருக்கப் போகிறதா? என்றும் ராமராக நடித்த பிரபாஸ் இமேஜை மொத்தமாக சந்தீப் ரெட்டி வங்கா முடித்து விடப் போகிறார் என்று கூறுகின்றனர்.

Next Story