சினிமாவுல கமலுக்கு அப்புறம் அந்த இடத்துல நீங்கதானா? சிம்பு சொன்ன 'நச்' பதில்

by SANKARAN |
kamal, str
X

சினிமாவுல கமலுக்கு அப்புறம் அந்த இடத்துல நீங்கதானா? சிம்பு சொன்ன 'நச்' பதில்

தக் லைஃப் படத்தில் கமல் ரோலுக்கு இணையாக சிம்புவுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கமல், மணிரத்னம் சாருக்கு நன்றி சொன்ன சிம்பு அடுத்ததாக தன் பெற்றோருக்கும் நன்றி சொன்னார். நேற்று நடந்த படத்தின் ஆடியோ லாஞ்சில் சிம்பு ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். அதாவது கமலுக்குப் பிறகு சகலகலாவல்லவன்னு சொன்னா அது டிஆரையே சொல்வாங்க. இப்போ அவரு மகன் சிம்பு சினிமாவுல அனைத்து விஷயங்களையும் கற்று தெரிந்து வைத்துள்ளார். அதனால் கமலுக்கு அப்புறம் சிம்புதான்னு சோஷியல் மீடியாவுல பேசப்படுகிறது. அதற்குப் பதில் அளிக்கும் விதத்தில் சிம்பு ஒரு விஷயத்தை நேற்று விழா மேடையில் சொன்னார். என்னன்னு பாருங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எனக்குப் பொறந்ததுல இருந்து நடிக்க சொல்லிக் கொடுத்து அப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். என்னடா இது ரொம்ப கஷ்டப்படுத்துறாங்களே. மத்த எல்லாரும் ஜாலியா இருக்கும்போது ஒரு பக்கம் சூட்டிங். ஒரு பக்கம் படிக்கணும். ஆனா இன்னைக்கு 40 வருஷம் கழிச்சி கமல் சார் கூட நடிக்கிற பாக்கியம் கிடைக்குது. அதுக்கு காரணம் எங்க அப்பா, அம்மா.


எங்க அப்பாவ நான் வரவேணாம்னு சொன்னேன். அவர் எமோஷனலா ஆகிடுவாருன்னு. ஆனா இப்போ நான் எமோஷனல் ஆகிட்டேன். இந்தப் படத்துல 'இனிமே இங்க நான் தான் ரங்கராய சக்திவேல்'னு சொல்வேன். சோஷியல் மீடியால கமல் சாருக்கு அப்புறம் இவர்தான்னு எல்லாரும் சொல்றாங்க. நான் ஒண்ணு சொல்றேன். தேவர் மகன்னு ஒரு படம் இருக்கு. அதுல சிவாஜி, கமல் சூப்பரா நடிச்சிருப்பாங்க.

அதனால சிவாஜி இடத்துல கமல் பிடிப்பாருன்னு சொல்லக்கூடாது. அந்த மாதிரி கமல் குட்டை, நெட்டைன்னு பல வேடங்களில் பல வருஷங்களா நடிச்சிக் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்தைப் பிடிச்சாரு. அதை யாரும் பிடிக்க முடியாது. கமல் என் தோள்ல ஏறி அடுத்த தலைமுறை போங்கன்னு சொல்வாரு. நான் உங்களை ஏணியா மதிச்சித்தான் போறேன். அப்படித்தான் அதை நான் எடுத்துக்குறேன் என்றார் சிம்பு.

Next Story