ரஜினிக்கு அறிவு இருக்கான்னு இனி யாராவது கேட்க முடியுமா?! அசர வச்சிட்டாரே மனுஷன்..!

எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி புத்தகம் 1 லட்சம் பிரதிகளைக் கடந்து விற்பனையாகி உள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒரு விழா நடந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சிவக்குமார் கம்பராமாயணம், மகாபாரதத்தைக் கரைச்சிக் குடிச்சவரு. அவரைக் கூப்பிடலாம். அது வேணாம்னா கமல்ஹாசன் பெரிய ஜீனியஸ். அவரைக் கூப்பிட்டுருக்கலாம். ஆனா ரஜினி அதில் இந்த விழாவுக்கு ஏன் என்னைக் கூப்பிட்டாங்க. 75 வயசுல கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோமோஷன்ல நடக்குறேன்.
ஒருகாலத்துல ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன்ல கிழி கிழின்னு என்னைக் கிழிப்பாங்க. ஆனாலும் எங்களுக்குள்ள நல்ல ப்ரண்ட்ஷிப் இருந்தது என்றார் ரஜினி. அந்த விழாவில் ரஜினி அவருக்குப் பிடித்தமான எழுத்தாளர்களாக சாண்டில்யன், கல்கி, ராஜேஷ்குமார், ஜெயகாந்தன் என பெரிய பெரிய ஜாம்பவான்கள் குறித்தும் அவர்கள் எழுதிய கடல்புறா, பொன்னியின் செல்வன், அவன் அழுதான் உள்பட பல நூல்கள் குறித்தும் அதைப் படிக்கும்போது ஏற்பட்ட பல சுவாரசியமான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இதைக் கேட்கும்போது இவ்வளவு புக்கை ரஜினி படிச்சிருக்காரான்னு நம்மையே ஆச்சரியப்பட வைத்தது. அதுமட்டும் அல்லாமல் நரசிம்மராவ் படிக்க விரும்பிய ஆயிரக்கணக்கான புத்தகங்கள் குறித்துப் பேசிய பின் அதன்பிறகுதான் எனக்கும் புத்தகங்கள் படிக்கணும்கற எண்ணம் வந்து ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கினேன் என்கிறார் ரஜினி. இதுக்கு முன்னாடி வரை ரஜினிக்கு என்ன தெரியும்? அவருக்கும் இந்த பங்ஷனுக்கும் என்ன சம்பந்தம்னுதான் தோணும்.
ஆனா இந்தப் பங்ஷன்ல ரஜினியின் இந்தப் பேச்சை கேட்டால் தான் தெரியும். ரஜினி எவ்ளோ புத்தகங்கள் படிச்சவருன்னு. அதனால தான் அவரோட பேச்சுக்கு இடையே சுவாரசியமான குட்டிக்கதைகள் எல்லாம் வருது. இந்த விழாவில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் குறித்தும் சிலாகித்துப் பேசினார். அந்தப் படத்தை இயக்க உள்ள ஷங்கர் குறித்தும் பெருமையாகப் பேசினார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் நடிகர் மட்டுமல்ல. ஒரு இயக்குனர். கதாசிரியர். வசனகர்த்தா. திரைக்கதை ஆசிரியர். எழுத்தாளர். சிறந்த டெக்னீஷியன் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா நடிக்க வேண்டிய நேரத்துல நடிக்க மட்டும்தான் செய்வார். எப்பவாவது யாருக்காவது உதவின்னு தேவைப்பட்டா இக்கட்டான சூழலில் கவலையை விடுங்கடா நான் இருக்கேன்னு சொல்லி புகுந்து விளையாடுவார் என்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.