நடிகர்கள் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கலாமா?!.. ரிஸ்க் எடுக்கும் ஐசரி கணேஷ்!..

by MURUGAN |
vikram
X

Chiyan vikram 63: ஒரு படம் ஹிட் ஆனாலே நடிகர்கள் தங்களின் சம்பளத்தை 3 மடங்கு ஏற்றிவிட காரணமாக இருப்பதே தயாரிப்பாளர்கள்தான் என சொல்வார்கள். 5 கோடி சம்பளம் வாங்கும் ஒரு நடிகரின் படம் ஓடிவிட்டால் உடனே உங்களுக்கு 20 கோடி தருகிறேன் என ஒரு தயாரிப்பாளர் வருகிறார். 15 கோடி சேர்த்து கிடைப்பதால் நடிகர்களும் கால்ஷிட் கொடுக்கிறார்கள்.

அதேநேரம், படம் ஓடினால் சம்பளத்தை ஏற்றும் நடிகர்கள் படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை குறைப்பதில்லை. அதே சம்பளத்தையே கேட்கிறார்கள். தமிழ் சினிமாவை பொறுத்தவரை மார்கெட் உள்ள நடிகர்கள் என்றால் அது 10 பேரை கூட தாண்டாது. இந்த 10 நடிகர்களைத்தான் எல்லா தயாரிப்பாளர்களும் நம்பி இருக்கிறார்கள்.


அதனால்தான் ஒவ்வொரு நடிகரும் 4 படங்களை கமிட் செய்து வைத்துக்கொள்கிறார்கள். தனுஷ், அஜித், சிவகார்த்திகேயன், சிம்பு என எல்லோரிடமும் 4 படங்கள் இருக்கிறது. அந்த தயாரிப்பாளர்களிடம் சில கோடிகள் அட்வான்சையும் வாங்கி வைத்துக்கொள்வார்கள். ஒரு தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு வருடக்கணக்கில் கால்ஷீட் கொடுக்கமாட்டார்கள்.

அந்த நடிகர் கால்ஷீட் கொடுக்கும்வரை அந்த தயாரிப்பாளர் காத்திருக்க வேண்டும். இதுதான் இன்றைய தமிழ் சினிமா நிலை. 60களில் தயாரிப்பாளர்களின் கையில் இருந்த சினிமா இப்போது நடிகர்களின் கைக்கு மாறியிருக்கிறது. நடிகர்கள் சொல்வதே சட்டமாகிவிட்டது. சியான் விக்ரமை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே அவர் ஹிட் படங்களை கொடுக்கவில்லை. ஆனால், சம்பளம் 50 கோடி கேட்கிறார். இத்தனைக்கும் கடைசியாக வெளியான வீர தீர சூரன் படமும் ஓடவில்லை.


அவரின் 63வது படத்தை மாவீரன் பட இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்குவதாக இருந்தது. ஆனால், விக்ரம் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். ஒருபக்கம் நடிகர்கள் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் கொடுக்கிறார். எனவே, அவரின் தயாரிப்பில் விக்ரம் நடிக்க அப்படத்தை 96 இயக்குனர் பிரேம் இயக்கவுள்ளார்.

ஏற்கனவே சிம்பு, ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்களுக்கு சம்பளத்தை அள்ளி கொடுத்தார் ஐசரி கணேஷ். மேலும், தனுஷ், நயன்தாரா ஆகியோரை வைத்து படங்களை தயாரித்து வருகிறார். வீர தீர சூரன் படம் ஓடவில்லை என்பதால் இந்த படம் ரிலீஸாகும்போது பஞ்சாயத்து இருக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.


Next Story