பாலாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?!.. பகீர் தகவலை சொன்ன சித்தப்பு சரவணன்!...

by MURUGAN |
bala
X

Director Bala: பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவர் பாலா. சேது திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம்தான் விக்ரமை ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்தது. மேலும், ரசிகர்களை அதிர வைத்தது. இந்த படம் மூலம் பாலாவுக்கு ரசிகர்களும் உருவானார்கள். அடுத்து சூர்யாவை வைத்து நந்தா எடுத்தார். மொக்கைப் படங்களில் நடித்து வந்த சூர்யாவுக்கு நந்தா முக்கிய படமாக அமைந்தது.

நடிப்பு என்றால் என்ன என்பதை சூர்யா இந்த படத்தில்தான் கற்றுக்கொண்டார். இந்த படத்திற்கு பின்னர்தான் காக்க காக்க படத்தில் நடித்தார். அடுத்து மீண்டும் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்தார். சூர்யாவுக்குள் இருந்த ஜனரஞ்சகமான நடிகனை இந்த படம்தான் ரசிகர்களுக்கு காட்டியது. அதற்கு ஒரே காரணம் பாலா மட்டுமே.


அதன்பின் நான் கடவுள் படத்திற்கு பாலா தேசிய விருது வாங்கினார். பின்னர் அவன் இவன், நாச்சியார், தாரை தப்பட்டை, வணங்கான் போன்ற படங்களை இயக்கினார். பாலா மிகவும் டெரர் ஆனவர். நடிகர்களை கை நீட்டி அடிப்பார் என்றெல்லாம் பேசுவார்கள். பரதேசி படம் எடுக்கும்போது அவர் குச்சியால் நடிகர்களை அடிக்கும் வீடியோக்களும் அப்போது வெளியானது.

நந்தா படத்தில் நடித்த நடிகர் சரவணன் ஊடகம் ஒன்றில் பாலா பற்றிய பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். பாலாவை பற்றி எல்லோரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் அப்படியெல்லாம் இல்லை. நந்தா படத்தில் நடிக்கும்போது ராமேஸ்வரத்தில் ஒரு சின்ன லாட்ஜில் என்னை தங்க வைத்தார்கள். ரூமில் நான் இருக்கும்போது பாலா அங்கே வந்து ‘உங்களுக்கு ரூம் ஓகேவா?’ என கேட்டார். மேலும், பாத்ரூமை போய் பார்த்தார். உடனே ‘இது சரியில்லை.. வெயிட் பண்ணுங்க’ என சொல்லி டிராவலர்ஸ் பங்களாவில் எனக்கு அறை ஏற்பாடு செய்து கொடுத்தார். அவ்வளவு நல்ல மனிதர் அவர்.


நந்தா படத்தில் நடிக்கும்போது குழந்தைக்கு சொல்லிகொடுப்பது போல ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுப்பார். அவர் டெரரானவர் என நினைக்கிறார்கள். பரதேசி படம் தொடர்பான வீடியோ கூட எப்படி நடிக்க வேண்டும் என அவர் சொல்லி கொடுத்த காட்சிகள்தான். அதில் சவுண்ட் எல்லாம் சேர்த்து வேறு மாதிரி திரித்துவிட்டார்கள். உண்மையில் பாலா ஒரு ஜென்டில்மேன். கல்லை கூட நடிக்க வைப்பார். மிகவும் சுலபமாக நம்மை நடிக்க வைத்துவிடுவார்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story