சூரி, சந்தானம் படங்களே பரவாயில்லை!.. விஜய் சேதுபதியின் ஏஸ் பாக்ஸ் ஆபீஸில் வேஸ்ட் பீஸ்!..

’ஏஸ்’ என்கிற படம் வந்ததே மக்களுக்குத் தெரியவில்லை என மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மைக்கை பிடித்து புலம்பும் அளவுக்கு அந்த படத்தின் வசூல் அதளபாதாளத்தில் உள்ளது. கடந்த வாரம் வெளியான சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் சூரியின் மாமன் படங்கள் கூட வசூலில் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது என்றும் மகாராஜா படம் கொடுத்த விஜய் சேதுபதிக்கா இந்த கதி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திக்க வேறு வழியில்லாமல் தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ஷாருக்கான் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.
நித்திலன் சாமிநாதன் புண்ணியத்தால் விஜய் சேதுபதிக்கு பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல படம் வெளியானது. அதை மக்கள் அந்தளவுக்கு கொண்டாடினார்கள். சீனாவில் கூட மகாராஜா படத்தை மக்கள் கண்கலங்கி பார்த்தனர்.
ஆனால், ஏஸ் படத்தை மலேசியா மக்கள் கூட சகித்துக் கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு படத்தை விஜய் சேதுபதி கொடுத்து விட்டார் என அனைத்து விமர்சகர்களும் கிழித்துத் தொங்கவிட்ட நிலையில், பொதுமக்களுக்கும் படம் பிடிக்காமல் போய் விட்டது.
முதல் நாள் வெறும் 1 கோடி வசூல் செய்த அந்த படம் சனிக்கிழமை 1.62 கோடி ரூபாயும், ஞாயிற்றுக்கிழமை இதுவரை 1.11 கோடி என மொத்தமாகவே 3.73 கோடி அளவுக்குத்தான் வசூல் செய்துள்ளதாம். இதே ரூட்டில் மீண்டும் விஜய் சேதுபதி சென்றால் பழையபடி வில்லனாக நடிக்க வேண்டியது தான் என்கின்றனர்.
நடிகர் சூரியின் மாமன் திரைப்படம் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் 15 கோடி வரை வசூல் செய்துள்ளன.