பழசை மறக்காத விஜய்!. கேப்டன் குடும்பத்திடம் அவர் சொன்ன அந்த வார்த்தை!..

by சிவா |   ( Updated:2025-05-06 11:09:28  )
vijay
X

#image_title

தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபலமான இயக்குனராக இருந்ததால் தானும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் விஜய். ஆனால், எஸ்.ஏ.சிக்கு அதில் விருப்பம் இல்லை. ஏனெனில், சினிமாவில் மகன் கஷ்டப்பட வேண்டாம் என நினைத்தார். ஆனால், விஜய் அதில் உறுதியாக இருந்ததால் அவரால் தடுக்க முடியவில்லை.

பல தயாரிப்பாளர்களிடம் சென்று என் மகனை வைத்து படமெடுங்கள் என கேட்டுப்பார்த்தார். யாரும் ஆர்வம் காட்டவில்லை. தன் மகனை வைத்து படமெடுக்க மற்ற தயாரிப்பாளர்கள் வரமாட்டார்கள் என்பது அவருக்கு புரிந்ததும் அவரே சொந்தமாக பணம் போட்டு நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் மகனை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் ரசிகன், தேவா என சில படங்களை இயக்கினார். ஆனால், விஜய் பேசப்படவில்லை.

எனவே, முன்னணி நடிகர்களின் படங்களில் விஜயை நடிக்க வைத்தால் ரசிகர்களிடம் அவரை கொண்டுபோய் சேர்க்கமுடியும் என கணக்குப்போட்டு அப்போது ஹீரோவாக நடித்து வந்த சரத்குமார், சத்தியராஜ், பார்த்திபன் என பலரிடமும் சென்று பேசினார். யாரும் பிடிகொடுக்கவில்லை. அப்போது அவருக்கு நினைவுக்கு வந்தவர்தான் விஜயகாந்த்.

அவரிடம் கேட்டதும் உடனே சம்மதம் சொன்னார். ஏனெனில், தமிழ் சினிமாவில் விஜயகாந்தை ஒரு ஹீரோவாக உருவாக்கியதில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நிறைய பங்குண்டு. அப்படி உருவான செந்தூரப்பாண்டி படம் சூப்பர் ஹிட். விஜயும் சி செண்டர் வரை ரீச் ஆனார். ஆனால், பின்னாளில் விஜய் வளர்ந்தபின் அவர் நன்றி மறந்துவிட்டார். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்க வந்தும் அவரை தன்னுடைய படத்தில் நடிக்கவைக்கவில்லை.

Senthoorapandi
Senthoorapandi

சண்முக பாண்டியனை சகாப்தம் என்கிற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார் விஜயகாந்த். அதன்பின் மதுர வீரன் என்கிற படத்திலும் நடித்தார். படைத்தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் ஒரு நல்ல இடம் இன்னமும் கிடைக்கவில்லை.

விஜய் நினைத்திருந்தால் அது நடந்திருக்கும். விஜயகாந்துக்கு இருந்த உதவும் குணம் விஜய்க்கு இல்லை என பலரும் பேசினார்கள். குறிப்பாக விஜயகாந்த் ரசிகர்கள் மிகவும் ஆதங்கத்துடன் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்கள். விஜயகாந்த் இறந்தபோது கூட சமூகவலைத்தளங்களில் பலரும் இதை பேசினார்கள். இன்னமும் அந்த கோபம் பலருக்கும் இருக்கிறது.

இந்நிலையில், சண்முக பாண்டியனை அடிக்கடி போனில் தொடர்பு கொள்ளும் விஜய் அவரை நலம் விசாரிக்கிறாராம். மேலும், எந்நேரமும் என்னை அணுகுங்கள் என கேப்டன் குடும்பத்திடம் அன்புக் கோரிக்கையும் வைத்திருக்கிறார் என்கிற செய்தி வெளியே கசிந்திருக்கிறது. போனில் நலம் விசாரித்து என்ன ஆகப்போகிறது?.. சண்முக பாண்டியனை தன்னுடை படத்தில் விஜய் நடிக்க வைத்திருக்க வேண்டும். உதவி கேட்டு கேப்டனின் குடும்பம் விஜயை எப்போதும் அணுகாது என கொந்தளிக்கிறார்கள் கேப்டன் ரசிகர்கள்.

Next Story